×

4,560 அடி உயரமுள்ள பர்வத மலை கோயிலில் ₹9.10 லட்சம் காணிக்கை பக்தர்கள் செலுத்தினர் கலசபாக்கம் அருகே நந்தி வடிவிலான

கலசபாக்கம் செப்.2: கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வத மலையில் மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் ₹9.10 லட்சத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரத்தில் நந்தி வடிவிலான பர்வத மலையில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகா அர்ஜுனேஸ்வரர், பிரம்மாம்பிகை அம்பாள் கோயில் உள்ளது. சித்தர்கள் இன்றும் காட்சி தரும் கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்று மலையேறி தாங்கள் கொண்டு செல்லும் அபிஷேக பொருட்களை வைத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் மலை உச்சியில் உள்ள கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த மார்ச் 4ம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, நேற்று செயல் அலுவலர் கு.ஹரிஹரன் மற்றும் ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் கோயில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் ₹9 லட்சத்து 10 ஆயிரத்து 223ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

The post 4,560 அடி உயரமுள்ள பர்வத மலை கோயிலில் ₹9.10 லட்சம் காணிக்கை பக்தர்கள் செலுத்தினர் கலசபாக்கம் அருகே நந்தி வடிவிலான appeared first on Dinakaran.

Tags : Parvatha hill temple ,Nandi ,Kalasapakkam ,Mallika ,Arjuneswarar ,temple ,Parvatha hill ,
× RELATED சிலைகளால் சிலிர்க்க வைக்கும் கோயில்கள்..!